புதுக்கோட்டையில் பழைய வழித்தடத்தில் 3 புதிய பேருந்துகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.பின்னர் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போது பெய்த பெரு மழை மற்றும் புயலால் சென்னை பாதிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் எந்த விதமான சிரமமும் இல்லாமல் தண்ணீர் உடனடியாக வடிந்த நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு தமிழக அரசு முறையாக திட்டமிட்டது காரணம்
2015ல் செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விடப்பட்டதால் தான் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர். பெரும் பாதிப்பும் ஏற்பட்டது ஆனால் சாத்தனூர் அணை படிப்படியாக தான் திறந்து விடப்பட்டது அதன் காரணமாக தான் எந்தவிதமான உயிரிழப்புகளும் பாதிப்பும் ஏற்படவில்லை செம்பரம்பாக்கம் ஏரி சம்பவம் என்பது வேறு சாத்தனூர் அணை சம்பவம் என்பது வேறு இரண்டையும் ஒப்பிட முடியாது
மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்
உடனடி நிவாரணத் தொகையாக 2000 கோடி ரூபாய் தேவை என்று முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்
இதுவரை மத்திய அரசு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை
ஆனால் நேற்று கிடைத்த தகவலின்படி மத்திய அரசு தமிழகத்திற்கு வேண்டிய உதவிகள் செய்யும் என்று தகவல் வந்துள்ளது
பொறுத்திருந்து பார்ப்போம்
தண்ணீர் அதிக அளவு அழுத்தமாக வரும் போது பாலம் இடிந்து விடுவது சகஜம் தான்இருப்பினும் வல்லுனர் குழு இது குறித்து ஆய்வு செய்யும்,
தமிழக அரசின் கொள்கை முடிவு என்பது பூரண மதுவிலக்கு தான் இருப்பினும் தமிழகத்தில் மட்டும் இது சாத்தியம் கிடையாது ,மத்திய அரசு இந்தியா முழுவதும் இதனை அமல்படுத்த வேண்டும் அப்போதுதான் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியம்
நாங்கள் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் அண்டை மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் கள்ளச் சந்தையில் மது விற்பனை ஆகியவை நடைபெறும்
மது விற்பனையிலிருந்து வரும் வருமானம் தமிழகத்திற்கு தேவையில்லைஅதை நம்பி தமிழக அரசு இல்லை.
ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதும் கொடுக்காததும் அந்தந்த முதலமைச்சரின் விருப்பம் அதற்கு யாரும் தலையிட முடியாது
செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறைக்குச் சென்றபோது அமைச்சராக இருந்தார் அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதில் அளிக்கப்பட்டது
இதில் எந்த விதமான தவறும் இல்லை
மதுரை டெக்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் இது தேவை இல்லை என்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளோம். தீர்மானத்தை நாங்கள் கொண்டு வரும்போது திமுக எப்படி இரட்டை வேடம் போட முடியும்.
இதனால் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் இந்த முடிவு எடுத்துள்ளோம்.
தமிழக வெற்றிக்கான தலைவர் விஜய் கலந்து கொள்ளும் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் நாங்கள் எந்த அழுத்தமும் அவர்களுக்கு அளிக்கவில்லை திருமாவளவன் போவதும் போகாததும் அவருடைய விருப்பம்.
எடப்பாடி பழனிச்சாமி அனாவசியமாக கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சட்டமன்றம் கூட உள்ளது சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி ஈடுபட்டும் அதற்குண்டான பதிலடி முதல்வர் அளிப்பார்.
இந்தியை திணிக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு யாரும் இந்தி கற்றுக் கொள்ளக் கூடாது என்று எங்களுடைய நிலைப்பாடு கிடையாது.