சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து உள்ளனர்.
இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் நிதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் முடிந்ததும் மழை வெள்ள சேதங்களுக்கு நிவாரணங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல பயிர்கள், கால்நடைகள், படகுகள், வீடுகள் சேதத்திற்கும், உயிர் சேதத்திற்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: