Skip to content
Home » கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

கொள்ளிடத்தில் 72ஆயிரம் கனஅடி நீர் திறப்பு…… போலீஸ் பாதுகாப்பு

  • by Senthil

கர்நாடகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்ததால்  மேட்டூர் அணை  நிரம்பி வழிகிறது. இதனால் உபரி நீர்  16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு  1 லட்சத்து48ஆயிரத்து 917 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில்  இருந்து வினாடிக்கு  1 லட்சத்து  48 ஆயிரத்து 70 கனஅடி தண்ணீர்  காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.

முக்கொம்புக்கு இன்று காலை  காலை 8 மணிக்கு 96ஆயிரத்து 573 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  அதில் 31,178 கனஅடி தண்ணீர் காவிரியிலும்,  64,395 கனஅடி கொள்ளிடத்திலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

கல்லணையில் இருந்து காவிரியில்  வினாடிக்கு 7,010 கனஅடியும்,  வெண்ணாற்றில் 1,505 கனஅடியும்,  கல்லணை கால்வாயில் 501 கனஅடியும் திறக்கப்படுகிறது.  கல்லணையில் இருந்து வினாடிக்கு  வினாடிக்கு 7,385 கனஅடி தண்ணீர்  கொள்ளிடத்திற்கும் திறக்கப்படுகிறது. இதனால் கொள்ளிடத்தில் மொர்தம்  71,680 கனஅடி தண்ணீர் செல்கிறது. இது மாலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் அணைக்கு இன்று மாலை வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கொள்ளிடம், காவிரி ஆகிய இரு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.் இன்று மாலை மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்பதால்,  முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட அனைத்து தடுப்பணைகளிலும், கொள்ளிடக்கரைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளதுடன், ஆங்காங்கே  தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!