Skip to content
Home » வெள்ளக்காடானது சென்னை…..இரவு வரை விடாது மழை

வெள்ளக்காடானது சென்னை…..இரவு வரை விடாது மழை

  • by Authour

வங்க கடலில்  உருவாகி உள்ள மிக்ஜம் புயல் இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டு இருந்தது. இந்த புயல்  சற்று நேரத்தில் தீவிர புயலாக மாறுகிறது.  இதன் காரணமாக நேற்று இரவு 10 மணி முதல் சென்னை மாநகரிலும், அதனையொட்டியுள்ள  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை விடாமல் செய்து வருகிறது. இந்த மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.  தி. நகர்,   ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், மீன்ம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல், அடையாறு, புழல் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ளது.  அது மணிக்கு 10 மணிக்கு  கி.மீ. வேகத்தில்  நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று இரவு வரை  மேற்கண்ட 4 மாவட்டங்களில் கனமழை கொட்டும். தற்போதைய நிலவரப்படி   ஆந்திராவில் நெல்லூருக்கு  வடகிழக்கே உள்ள பபட்லாவுக்கும்  மசூலிப்பட்டினத்துக்கும் இடையே புயல் நாளை முற்பகல் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மழை காரணமாக சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மிகவும் குறைக்கப்பட்டு உள்ளது. தினமும் சென்னையில் 3600 பஸ்கள் இயக்கப்படும். இன்று  வெறும் 320 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.  இன்று இரவு வரை மழை கொட்டும், அதன் பிறகு  புயல்சின்னம் ஆந்திராவை நோக்கி நகரும் என்பதால் மழையில் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *