நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. அதன்படி 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு எடுத்துள்ளது. வெள்ளம் அபாய கட்டத்தி்ல் செல்கிறது. இந்த நி்லையில் பழைய குற்றால அருவில் குளிக்க வந்டத 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டான். அவனை தேடும் பணி நடக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.