கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த 2 தினங்களாக கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் வால்பாறை தலைநகர் எஸ்டேட், சண்முகா எஸ்டேட் ,அட்டகட்டி போன்ற பகுதிகளில் அதிக அளவில் கன மழை பெய்ததால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆழியார் கவியருவியில் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு வேலிகள் அனைத்தும் உடைந்தது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தற்போது வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து குறைந்த உடன் தடுப்பு சீரமைக்கப்படும். அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.