திருச்சியில் இருந்து கடந்த 11ம் தேதி ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேரம் திருச்சியை வட்டமடித்தது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்டபின் விமானம் புறப்பட்டு சென்றது.
இதே போல நேற்று மாலையும் ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. மாலை 5.40 மணிக்கு 148 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தபோது விமானத்தில் எலக்ட்ரிக்கல் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.
இதனால் பழுதை சீரமைக்கும் பணி நடந்தது. பழுது நீக்கப்பட்ட பின்னர் இரவு 9.45 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை சரி செய்ய முடியவில்லை. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு நள்ளிரவு 11.30 மணிக்கு தான் இரவு உணவு வழங்கப்பட்டது. இதனால் பயணிகள் டென்ஷனாகி விட்டனர். அதன் பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து மாற்று விமானம் கொண்டு வரப்பட்டு இன்று அதிகாலை 2.45 மணிக்கு தான் விமானம் ஷார்ஜா புறப்பட்டு சென்றது.