குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. காஸ் கசிந்து தீ பிடித்ததா அல்லது மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்ததா என பல கோணங்களி்ல் விசாரணை நடக்கிறது. தீ மளமளவென பரவியது இந்த விபத்தில் சுமார் 50 பேர் பலியானார்கள். 50 பேர் காயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் இந்தியாவை சேர்ந்த பலர் உள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 5பேரும், கேரளாவை சேர்ந்த 15க்கும் மேற்பட்டவர்களும், மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் தீ விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலரது உடல்கள் அடையாளம் காணமுடியாதபடி கச்சி எறியப்பட்டுள்ளது. உருக்குலைந்து போன உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை மீ்ட்டு இந்தியா கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உஎ்ளது. இதற்காக தனி விமானம் குவைத் அனுப்பப்பட உள்ளது. இந்த விபத்து நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. இத்தாலி் புறப்படுவதற்கு முன் பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.