புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா முன்னாள் படைவீரர்நலத்துறையின்சார்பில் 2023ம் ஆண்டிற்காண கொடி நாள் இலக்கினை முழுமையாக எய்திய
குளத்தூர் தாசில்தார் கவியரசு வுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
கொடி நாள் இலக்கினை எட்டிய புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணனுக்கும் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில்
கூடுதல் ஆட்சியர்( வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா, உதவி இயக்குனர் (முன்னாள் படைவீரர் நலத்துறை) கேப்டன் விஜயகுமார் , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.