புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீன்பிடி படகுகளுக்கு பொருத்தும் இன்ஜின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதே போல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியுதவித்திட்டத்தின் கீழ், உயர் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை மாணவர் ஒருவருக்கும், மாற்றுத்தினாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளை மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார். மேலும் மாற்றுதிறனாளிகடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, மாற்றித்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) ந.பஞ்சராஜா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அமீர்பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.