ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் தம்மிசெட்டிசிவா (24)இவர் குடும்பத்துடன் jதிருவெறும்பூர் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக தங்கி துப்பாக்கி தொழிற்சாலை கட்டளை வாய்க்கால் கரைப்பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று திடீரென அவரது 4 வயது மகள் மாதுரி , அந்தப் பகுதியில் விளையாடி கொண்டிருந்த போது வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்தார்.
உடனடியாக மாதுரியை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாதுரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி மாதுரி இறந்தார். இது குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.