Skip to content

அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

  • by Authour

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள்  மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி   திருவள்ளூாில் இருந்து கன்னியாகுமரி வரை  வங்காள விரிகுடா பகுதியில் இன்று முதல் தடைகாலம் அமலுக்கு வந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில்  சுமார் 1 லட்சம் விசைப்படகுகள் முடங்கி விட்டது.  5 லட்சம் மீனவர்கள்  நேரடியாக வேலை இழந்து  உள்ளனர். இந்த நிலையில் மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளரும்,  தமிழ்நாடு மீனவர் நல வாரிய பொதுச்செயலாளருமான   மல்லிப்பட்டினம்  ஏ தாஜூதீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மீன் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.அதன்படி தமிழகத்தில் உள்ள கிழக்கு கடலோர பகுதியில் வங்காள விரிகுடா பகுதியில் மீன்பிடி தடைகாலம் பாரம்பரிய மீன்பிடி படகுகளை தவிர்த்து ஏனைய விசைப்படுகளுக்கு இன்று15.4. 2025 முதல் தொழில் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் அனைத்து படகுகளும் பாதுகாப்பாக கரைஓரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடைகாலத்தில் மேற்கண்ட படகுகளை பராமரிப்பு செய்தும், வலைகளை புதிதாக அமைத்தும் மீண்டும் 61 நாட்களுக்கு பிறகு ஜூன் 15. 6.2025 முதல் தொழிலுக்கு செல்ல மீனவர்கள் தயாராவார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இந்த சட்டம் நடைமுறையில் இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் 2000வதுஆண்டு தடைகாலத்திற்கு முன் இருந்ததை விட தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது.டை பெறுவதாக கூறுவது ஏற்புடைவது அல்ல. மேற்கண்ட தடைகாலத்தை அக்டோபர் முதல் நவம்பர் வரை மாற்றி அமைத்தால் வடகிழக்கு பருவ மழை காலமாக  இருப்பதினால் மீன் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக நடைபெறும் .இதனால் மீன் வளமும் பெருகும் மீனவர்களுக்கும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு ஏற்படும்.

இதை பல வருடங்களாக கோரிக்கையாக வைத்தோம் மத்திய ,மாநில அரசுகள் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இதனை மாற்றி அக்டோபர் முதல் நவம்பர் வரை தடைகாலமாக அறிவிக்க வேண்டும். மேலும் இந்த தடைக்காலம்  கோடை காலத்தில் வருவதால் படகுகள் மிகவும் காய்ந்து அதிகப்படியான செலவினங்களை ஏற்படுத்தி விடுகிறது.மீனவர்கள்  பெரும்  துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அவர்களுக்கு பொருளாதாரப் பாதிப்பும் ஏற்படுகிறது .

இவற்றை கருத்தில் கொண்டு தடைக்காலத்தை மாற்றி தர வேண்டும் மேலும் அரசால் அறிவிக்கப்பட்ட இந்த தடைக்காலத்தில் தமிழக அரசு தரக்கூடிய தடைகால நிவாரண நிதியாக தாயுள்ளத்தோடு தமிழக முதல்வர்  ரூ8000 ரூபாய் தருகிறார்கள். ஒன்றிய அரசு மீனவர்களுக்கு எந்த வித உதவியும் இதுவரை தடை காலம் ஆரம்பித்தது முதல் இன்று வரை கொடுக்கப்படவில்லை.

இதனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசும் சேர்த்து 25,000 ரூபாயாக தந்தால் இரண்டு மாதகாலத்திற்கு,மீனவர்கள் வாழ்வாதார இழப்பை சரி செய்யும். அத்துடன் மீனவர்களுக்கு படகு ஒன்றுக்கு பராமரிப்பு செலவினங்களுக்காக படகுக்கு ஏற்ப மானியமாக ஒரு லட்சம் வரை ஒன்றிய அரசு நிதியிலிருந்து வழங்கினால் மீனவர்களின் பொருளாதாரம் உயர வாய்ப்பு ஏற்படும் இதனை செய்து தர மாண்புமிகு பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் தடைகாலம்  முடிந்து படகுகள் தொழிலுக்கு சென்று விட்டு வரும்போது பிடித்து வரும் இறால் மீன்களுக்கு உரிய விலை கிடைப்பதுஇல்லை. உரிய விலை கிடைக்க மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

error: Content is protected !!