ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதனை மீன்பிடி தடைக்காலம் என அழைப்பார்கள். இருந்த போதிலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை தவிர சிறிய ரக நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில் எந்தவித தடையும் இல்லை.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் இன்று முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு தடைக்காலம் அமலில் இருக்கும். நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள். மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.