பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் திருநகர் பகுதியில் சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மகன் ராமராஜ்(26) இவர் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு மீன் வாங்குவதற்காக குழுமணி மெயின் ரோட்டில் உள்ள காசி விளங்கி மீன் மார்க்கெட் வந்தார். மீன் வாங்கிவிட்டு சுமார் 4 மணிக்கு காரில் மீனை ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் ராமராஜ் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராமராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமராஜை பின்தொடர்ந்து வந்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்பது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்… கொலை செய்யப்பட்ட ராமராஜ் ரவுடி என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும் கொலை வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வந்த ராமராஜை பழிக்கு பழியாக எதிராளிகள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இன்று அதிகாலை உறையூர் மெயின் மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மீன் மார்கெட்டில் ரவுடி வெட்டிக்கொலை…
- by Authour