Skip to content

ஆஷிஷ் வித்யார்த்தி 2ம் திருமணம்…. தீங்கு விளைவிக்கும்…. முதல் மனைவி உருக்கம்

பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. 60 வயதான இவர்,  அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை நேற்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆஷிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள இவர், பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.

பாடகர் மற்றும் நாடக கலைஞரான ராஜோஷி பருவாவை இவர்  திருமணம் செய்திருந்தார். இவர் பழைய நடிகையான சகுந்தலா பருவாவின் மகள் என்பது குறிப்பிடதக்கது. நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.  இது குறித்து ஆஷிஷ் வித்யார்த்தி கூறும் போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது, ஒரு நீண்ட கதை. அதைப்பற்றி பிறகு சொல்கிறேன். எனது வாழ்கையின் இந்த கட்டத்தில், ரூபாலியை திருமணம் செய்திருப்பது சிறந்த உணர்வைத் தருகிறது. காலையில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதனைத் தொடர்ந்து, மாலையில் எங்கள் குடும்பத்தினருடன் விருந்து நிகழ்வு நடைபெற்றது.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- “வாழ்க்கையில் சரியான நபர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு தேவை என்று அவர்கள் உங்களிடம் கேட்க மாட்டார்கள். உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைச் செய்யாதீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள்” அமைதி உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும். நீங்கள் வலிமையானவர், உங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான நேரம் இது. நீங்கள் அதற்கு தகுதியானவர் என கூறி உள்ளார். ஆஷிஷின் இரண்டாவது திருமணத்தில் ராஜோஷிக்கு விருப்பமில்லை என்பது பதிவுகளில் இருந்து தெரிகிறது. எது எப்படியோ, ஆஷிஷின் திருமணத்தோடு, ராஜோஷியின் பதிவும் விவாதப் பொருளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!