தமிழில் வெளிவந்த முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இது 1876ல் வெளிவந்தது. இதை எழுதியவர் மாயூரம்(மயிலாடுதுறையின் பழைய பெயர்) வேதநாயகம். இவரை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம் மற்றும் சிலை அமைக்க முடிவு செய்துள்ளது.
மயிலாடுதுறை நகராட்சி ஆரோக்கியநாதபுரத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் சிலை அமைய உள்ளது. அந்த இடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் .ஏ .பி .மகாபாரதி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி .வ.யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.