மத்திய பிரதேசம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர்.முதலிரவில் தம்பதி தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது, மணப்பெண்ணின் வயிற்றுப் பகுதியில் தையல் போடப்பட்டிருந்ததை மாப்பிள்ளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஏன் வயிற்றில் இத்தனை தையல் போடப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மணமகள் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டதாக தெரிவித்தார். மழுப்பலான பதில் தெரிவித்ததால் மணமகனுக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் அதுகுறித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளார். சந்தேகம் வலுக்கவே, தீவிரமாக கேட்டதில் அவருக்கு உண்மை வெளிப்பட்டது.
அதாவது தற்போதைய புதுப்பெண் ஏற்கனவே ஒருவரை காதலித்ததும் அந்த நபர் மூலம் பெண் கர்ப்பமடைந்த நிலையில், மூன்று மாதத்திற்கு முன் அறுவை சிகிச்சை மூலம் கருவை கலைத்துள்ளதும் தெரியவந்தது. இந்த உண்மைகளை பெண் வீட்டார் மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை மருத்துவமனைக்கு சென்று அந்த மணமகன் உறுதிப்படுத்திய நிலையில், அதிர்ச்சியடைந்த மணமகன் மனைவியை அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணின் வீட்டார் கணவர் மீது எதிர் வழக்கு தொடர்ந்து ஜீவனாம்சம் கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என அந்த நபர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது