தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி குட்டிப்புலி, பாண்டிய நாடு, மஞ்ச பை, ஜிகர்தண்டா, நான் சிகப்பு மனிதன், கொம்பன், வேதாளம், உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். பிறகு ஆரம்ப காலகட்டத்தை போல பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி தனது படிப்பிலும் கவனம் செலுத்து வந்தார்.
அதற்கு பிறகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரி- எண்டரி கொடுத்தார். சந்திரமுகி 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை லட்சுமிமேனன் அடுத்ததாக சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியும் இருக்கிறார்.
இதற்கிடையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை லட்சுமிமேனன் தன்னுடைய பள்ளிப்பருவ காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். இது குறித்து பேசிய நடிகை லட்சுமி மேனன் ” எனக்கு பள்ளி கூடம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒருவர் மீது காதல் வந்தது. என் மீதும் அவருக்கு காதல் இருந்தது. நாங்கள் இருவரும் பள்ளிக்கூட படிக்கும்போதே காதலித்தோம்.
ஆனால் வெளியே செல்வது அதிகமாக பேசிக்கொள்வது என்று எல்லாம் இல்லை. ஏனென்றால், நாங்கள் இருவருமே படிப்பில் அதிகமாக கவனம் செலுத்தினோம். எப்போதாவது நேரம் கிடைத்தது என்றால் அவரிடம் நான் தொலைபேசியில் வீட்டிற்கு தெரியாமல் பேசுவேன்.
பிறகு பள்ளிக்கூடம் முடிந்த பின் காதல் என்ன ஆனது என்று தெரியாமலே போய்விட்டது. நாங்கள் இருவருமே அதனை பற்றி யோசிக்கவே இல்லை பேசவும் இல்லை. பின், அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்ததாகவும் நான் கேள்விப்பட்டேன். ” எனவும் தனது முதல் காதல் பற்றி நடிகை லட்சுமி மேனன் பேசியுள்ளார்.