Skip to content
Home » பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

பட்டாசு ஆலை விபத்து… உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில்

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முகமது சுதீனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.