திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள காமராஜ் நகரில் வீட்டில் சமையல் செய்ய விறகு அடுப்பை பற்ற வைத்த போது தீப்பொறி வீட்டின் கூரை மீது பட்டு தீ பிடித்து எரிந்தது புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
புள்ளம்பாடி காமராஜ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாலதி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாலதி சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து தீப்பொறி எழுந்து வீட்டின் கூரை மீது பட்டது. இதில் வீட்டின் மேல் கூரை தீப்பிடித்து எரிந்தது.இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல்கொடுத்தனர். தகவலறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் பாரதி வீரர்கள் அஜித் குமார், ரமேஷ்குமார், கனகராஜ் பிரசாந்த் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ மேலும் பராவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
இச்சம்பவத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.