Skip to content
Home » புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

புதுகை பள்ளி சமையல் கூடத்தில் குபீர் தீ-பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ளது டி.களபம்.  இங்குள்ள  தொடக்கப்பள்ளி புதிதாக கட்டப்படுவதால், அங்குள்ள  நூலகத்தில்  பள்ளி செயல்படுகிறது.   அரையாண்டு விடுமுறை முடிந்து  இன்று  பள்ளிகள் திறந்தது. பள்ளி சமையல் அறையில் உள்ள  காஸ் சிலிண்டரில்  கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காமல் சமையல் பணியாளர்கள்  அடுப்பை பற்றவைத்தபோது குபீர் என தீப்பிடித்தது.  இதனால்  மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.  தீயணைப்பு படையினர் வந்து ஆய்வு செய்து  காஸ் கசிவை சரி செய்தனர்.