Skip to content

மாநிலத்திலேயே முதன் முதலாக தடைகளை உடைக்கும் பயிற்சி களம் திறப்பு..

  • by Authour

பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள

தீயணைப்போர்களுக்கான ஆப்ஸ்டகல்சை (தடைகளை உடைக்கும் பயிற்சி களம்) தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் திறந்து வைத்து பயிற்சியாளர்களுக்கான பயிற்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ள சிறப்பு தளவாடங்கள், உபகரணங்கள் மற்றும் ஊர்திகளை ஆய்வு செய்தார். பின்னர்

தீயணைப்பு வீரர்களின் பிரமீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து சிறந்த பயிற்சியாளர்கள், தீயணைப்பு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் டிஐஜி அபாஷ்குமர் நிருபர்களிடம் கூறுகையில், தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மாநிலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்போர்களுக்கான ஆப்ஸ்டகல்ஸ் (தடைகளை உடைக்கும் பயிற்சி களம்) திறக்கப்பட்டுள்ளது. இதனை தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். வரும் நிதியாண்டில் தீயணைப்புத்துறைக்கு அதிக நீதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இந்நிதி மூலம் அதிகளவு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கான வாகனங்கள் வாங்கப்படவுள்ளது. தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்டப்படும். தேவைப்படும் இடங்களில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கவும், புதிய தீயணைப்பு வீரர்கள் நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .

நிகழ்ச்சியில் மத்திய மண்டல துணை இயக்குநர் கல்யாணகுமார், பெரம்பலூர் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர்கள் கோமதி, வீரபாகு மற்றும் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!