திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்து பதற்றமான அவர் நவல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர் .
மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின. மேலும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.