தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30.6.2023) தலைமைச் செயலகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பா. இருசம்மாள் , மற்றும் தீயணைப்போர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 120 நபர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதற்கு அடையாளமாக 5 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு படை வீரர்களுக்கு பணி நியமன ஆணை ……முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
- by Authour
