கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில் அரசு காலணி அருகே உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு 48 வார்டுகளுக்கு உட்பட்ட இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு சேகரிக்கப்பட்டு மலை போல் காட்சிகளிக்கின்றன. இந்நிலையில் இன்று மர்ம நபர்கள் யாரோ குப்பைக்கு தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. குப்பைகளை அரைக்கும் இயந்திரம் தீயில் எறிந்து சேதம். அதிக
காற்றின் காரணமாக குப்பையில் பற்றிய தீ மளமளவென பரவி எரிய துவங்கியது. தகவலறிந்து அங்கு 3 வாகனங்களில் வந்த கரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாங்கல் சாலை வழியாக நாமக்கல், சேலம் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. குப்பை கிடங்கை சுற்றியுள்ள மக்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.