மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்குதங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியும் நடந்தது. விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் சிலர் மூர்ச்சையாகி மயங்கினர்.
அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். காயமடைந்த மற்ற பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் பெயர் சரண்யா, பரிமளா என அடையாளம் காணப்பட்டது.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிரிட்ஜ் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த விடுதியை நடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.