திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (எ) வைரபெருமாள் இவர் தேங்காய் மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதவத்தூரில் இவர் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில் உள்ள சித்தத்தூர் பகுதியில் சுமார் 1/2 ஏக்கரில் உள்ள காலி இடத்தில் கிடங்கு அமைத்து தேங்காய் மட்டைகளை கொட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தேங்காய் மட்டை கொட்டப்பட்ட கிடங்கில் இருந்து திடீரென புகை வந்துள்ளது இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தகவல் அறிந்து அங்கு சோமரசம்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.