கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு குடோன் குடியிருப்பு நிறைந்த பகுதியில் அமைந்திருந்ததால் அருகில் உள்ள வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:பட்டாசு ஆலை விபத்து