இந்துக்களின் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக முன்னாள் டிஜியும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவுமான நடராஜ் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவு செய்திருந்தார். இது குறித்து காலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்து இருந்தார்.
நட்ராஜின் அவதூறு தகவல் குறித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா, இன்று திருச்சி மாவட்ட எஸ்.பியிடம், ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு மீது திருச்சி மாவட்ட போலீசார் , நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.