தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய், தனது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதேநேரம் நீண்ட நாட்களாக விஜய் அரசியலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி அடிக்கடி தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து விஜய் பேசி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று தனது பனையூர் இல்லத்தில் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பிற்காக நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூருக்கு கார் மூலம் நடிகர் விஜய் சென்றார். அப்போது சிக்னல் ஒன்றில் விஜய்யின் கார் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக நடிகர் விஜய்யின் காருக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து விதியை மீறிய நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் 500 ரூபாய் அபராதத்தை இன்று செலுத்தியுள்ளார். இதற்கான ரசீது இணையத்தில் வெளியாகியுள்ளது.