Skip to content

அபராதம் கட்டாத காரில் வந்த விஜய்… கிளம்பிய புது சர்ச்சை…

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சிக் கொடியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியை பலப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவிற்கு விஜய் பயணித்த வந்த TN 37 DR 1111 என்ற காருக்கு நிலுவையில் உள்ள ரூ.4,500 அபராத தொகை உள்ளது.TN 37 DR 1111 என்ற கார் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட நிலையில், மொத்தமாக ரூ.4,700 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது கடைசியாக விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.200 மட்டுமே செலுத்தியுள்ள நிலையில்,  ரூ.4,500 அபராத தொகை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட TN 37 DR 1111 என்ற டொயோட்டா இனோவா கிரிஸ்டா கார், கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!