Skip to content

குளறுபடியுடன் முடிந்த திருச்சி கலைத்திருவிழா….. கரூரை பார்த்து கத்துக்கோங்க….

  • by Authour

தமிழகத்தில்  அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும்  மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும்  கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.  மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணறும் வகையில் திமுக ஆட்சி ஏற்பட்டதும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கல்வி ஆண்டில்,  ;சுழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ‘என்ற தலைப்பில் கலைத்திருவிழா நடந்து வருகிறது.  பள்ளிகள்,  ஒன்றியம்,  என்ற அளவில் போட்டிகள் முடிந்து இப்போது மாவட்ட போட்டிகளும் நிறைவடைந்து விட்டது.

மாநில போட்டி டிசம்பர் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை  கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.   மாவட்ட போட்டிகளில் வென்றவர்கள், மாநில போட்டியில் பரிசை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர்  அன்பில் மகேஸ் மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் நிலைமை வேறு.  இங்கு மாவட்ட  கலைத்திருவிழா ஏராளமான குளறுபடிகளுடன் நடந்து முடிந்தது.  போட்டிகள் நடைபெற்ற பள்ளிகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் ஏற்பாடுகள் சரிவரசெய்யப்படவில்லை.

போதுமான இட வசதியும்  செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பல இடங்களில் மைக்செட்  கூட இல்லாமல், பழங்கால  தெருக்கூத்து போல மாணவ, மாணவிகள் உரக்க கத்தி நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர்.

இப்படிப்பட்ட குளறுபடியான ஏற்பாடுகளால், ஒன்றிய அளவில்  திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகள் மாவட்ட போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை, திறமைகளை வெளிப்படுத்த முடியவில்லை என அப்செட் ஆனார்கள்.

பக்கத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் கலைத்திருவிழா,  மாநில போட்டிக்கு இணையாக நடத்தப்பட்டு உள்ளது. அந்த விழாவில்   மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ஒன்றரை மணி நேரம் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இது கரூர் மாணவர்களுக்கு புது தெம்பு கொடுத்து உள்ளது. மாநில போட்டியிலும் வெல்வோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் திருச்சியில் இந்த  கலைத்திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய குழு அமைக்கப்பட்டிருந்ததும் அந்த குழு எந்த வேலையையும் ஒழுங்காக செய்யவில்லை என போட்டியாளர்கள் மனக் குமுறலை  கொட்டினர்.

இதில் இன்னொரு சோதனை என்னவென்றால்  மாவட்ட கலைத்திருவிழா போட்டி முடிந்து 5 நாட்கள் ஆகியும் ரிசல்ட் வெளியாகவில்லை. மாநில போட்டி தொடங்க சரியாக இன்னும் ஒருவாரமே உள்ளது. மற்ற மாவட்ட மாணவர்கள், மாநில போட்டிக்கு  ரிகர்சல் செய்து கொண்டு இருக்கும்போது,  கல்வி அமைச்சரின் மாவட்டத்தில் போட்டியாளர்கள் யார் என்றே இன்னும் தெரியவில்லை.

எனவே அமைச்சர் உடனடியாக தலையிட்டு, மாவட்ட போட்டி ரிசல்ட்டை வெளியிட்டு, மாநில போட்டிக்கான மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த உத்தரவிடவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இனி வரும் நாட்களில் கல்வித்துறை விழாக்கள், கல்வி அமைச்சரின் மாவட்டத்தில் முன்னுதாரணமாக  இருக்க வேண்டும் என்றும்  மாணவர்கள் விரும்புகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!