திருச்சியில் இருந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இருவரும் ஒரே விமானத்தில் சென்னை பயணம்
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மதியம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்தார் அப்போது செய்தியாளர்கள்…. சென்னையில் 5 பேர் உயிரிழந்தது குறித்து கேட்ட போது அதற்கு பதில் பேச மறுத்து நிர்மலா சீதாராமன் விமான நிலையத்திற்குள் சென்றார்.
அதன் பின் விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்…. அப்போது செய்தியாளர்கள் ஜம்மு காஷ்மீர் ஹரியானா மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்துள்ளது என கேட்டபோது …..அதற்குள் உங்களுக்கு முடிவுகள் தெரிந்து விட்டதா என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இறுதியில் காங்கிரஸ் கட்சியினுடைய லட்சியங்கள் தான் வெல்லும் என்ற அழுத்தமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இடையில் அந்த லட்சியங்களை மாற்று லட்சியங்கள் வெல்வது மாதிரி தெரிந்தாலும் இறுதியில் காங்கிரஸ் லட்சியங்கள், கொள்கைகள் தான் வெல்லும். அது நாளை நிரூபணமாகும் என நம்புகிறேன் என்றார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் ஐந்து பேர் உயிரிழந்தது குறித்து கேட்ட பொழுது வருந்தத்தக்கது துரதிஷ்டவசமானது பத்திரிகைகளில் வந்த செய்தியை தான் நான் பார்த்தேன் என்ன காரணம் என தெரியவில்லை ஆனால் வருந்தத்தக்கது, துரதிஷ்டவசமானது தமிழக அரசு அந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் வழங்கும் என நம்புகிறேன் என்றார்.