திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.
இந்நிலையில் நேற்று இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்த தகவ் அறிந்து வந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசா ரணை செய்து வருகின்றனர்.இவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மோகன்தாஸ் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கி, அந்தப் பணத்தை சிலருக்கு வட்டிக்கு கொடுத்துள்ளார். இவர் கொடுத்த இடத்தில் வட்டி பணமும், அசல் பணமும் திரும்ப வரவில்லை. இதனால் மோகன்தாஸ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதற்கிடையில் பணத்தை கொடுத்தவர் பணத்தை அடிக்கடி மோகன்தாசிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் மோகன்தாஸ் தனது வீட்டை அடமானமாக வாங்கிய பணத்துக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் பணம் கொடுத்தவர் வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மோகன் தாசும், அவரது மனைவியும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். குடும்ப தகராறும் ஏற்பட்டுள்ளது .இந்த சூழலில் தான் கணவன், மனைவி இருவரும் சேலை மற்றும் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
.கணவன் மனைவி இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.