நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
நெல்லை, கடலூர், சேலத்தில் 1 லட்சம் புத்தகங்கள் கொண்ட புதிய நூலகங்கள் அமைக்கப்படும். போட்டித் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் நோக்கில் இந்த நூலகங்கள் ஏற்படுததப்படும்.
நிதி தராமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு . எத்தனை தடைகள் எதிர்வரினும், இரு மொழிக்கொள்கையை விட்டுத் தரமாட்டோம். 2 ஆயிரம் கோடி நிதி இழந்தாலும் இருமொழிக்கொள்கையை விட்டுத்தர மாட்டோம்.
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46, 767 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறைக்கு சொந்த ஆதார நிதியை விடுவித்துள்ளோம்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதிகள் தொடங்கப்படும்.
உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 19 % உயர்ந்துள்ளது. அண்ணா பல்கலை கழகம் தரம் உயா்த்த நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது.
உயர்கல்விக்கு ரூ.8494 கோடி ஒதுக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.