Skip to content

எதிரிகளிடம் வலிமையை காட்டாமல், நமக்குள்ளேயே சண்டையிடுகிறோம்….ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று  நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில்  மோகன் பகவத் பேசியதாவது:  நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும். உலக பொருளாதார மந்தநிலை, கொரோனா பெருந்தொற்று சமயத்தில் உலகின் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது மிகவும் பெருமைக்குரிய தருணம்.

எல்லையில் அமர்ந்துள்ள எதிரிகளிடம் நாம் நமது வலிமையை காட்டுவதில்லை. ஆனால், நாம் நமக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறோம். நாம் ஒரே நாடு என்பதை நாம் மறந்துவிடுகிறோம். சில மதங்கள் வெளியில் இருந்து இந்தியா வந்தது. அவர்களுடன் நாம் போர் செய்துள்ளோம்.  வெளியாட்கள் சென்றுவிட்டனர். இப்போது அனைவரும் இங்கு உள்ளவர்கள் தான்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *