கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த அய்யர்மலை அரசு கலை கல்லூரி அருகே நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விக்னேஷ் என்ற ஐடிஐ மாணவன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து 2 மாணவர்கள் உட்பட 4 நபர்களை பிடித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
