Skip to content
Home » உலக கோப்பை கால்பந்து…. பிரான்ஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு……ரொனால்டோ கணிப்பு

உலக கோப்பை கால்பந்து…. பிரான்ஸ்சுக்கு வெற்றி வாய்ப்பு……ரொனால்டோ கணிப்பு

  • by Senthil

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டி:’உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது. தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்’. லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல’

இவ்வாறு அவர் கூறினார்.

46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!