சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தில் , மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட 8வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிறுவன் சக்தி சரவணன் இன்று காலை உயிரிழந்தார். மர்மக்காய்ச்சலுக்கு, டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலையால் சிறுவனுக்கு சிறுநீரகம் பாதிப்பு என டாக்டர் தெரிவித்துள்ளனர்.