கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட மாலைமேடு கிராமத்தில் மாலையம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்தியாவில் ஆட்சி புரிந்த நவாப் ஆட்சி காலங்களில் ஒரு அத்திமரத்தால் பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ள அத்தி மரத்தை இப்பகுதி மக்கள் கோயிலில் வைத்து குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இந்த கோவில் திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த 1994ம் ஆண்டு மேற்படி அத்தி மரச்சிலை மர்ம நபர்களால் திருடப்பட்டது. அந்த சிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை .
மாலையம்மன் சிலை திருட்டு போனதிலிருந்து சிலை இல்லாமல் கடந்த 28 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடத்தப்படாமல் இருந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு திருவிழா நடத்தாமல் இருந்து வருவதால்
மாலைமேடு பகுதி பொதுமக்கள் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி வந்தனர்.
மாரியம்மன் கோயிலுக்கு திருவிழா நடத்துவதற்கு ஊர் பொதுமக்கள் இளைஞர்களும் மற்றும் முக்கியஸ்தர்களும் முடிவு செய்து இதில் மாயமான மாலையம்மன் சிலைக்கு பதிலாக புதிய சிலை வடிவமைத்து கோயில் திருவிழா நடத்துவதற்கு ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே கோயிலில் இருந்து மாயமான சிலை சில மாதங்களுக்கு முன், கோயில் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருடிய மர்ம நபர்கள் அதை வீசி சென்றதாக கூறப்படுகிறது.
சிலை கிடைத்ததாலும், 28 ஆண்டுகளுக்கு பிறகுகோயில் திருவிழா நடைபெறுவதாலும் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழாவில் ஒரு அம்சமாக 50 க்கு மேற்பட்ட மாடுகள் மாலை மாடு தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் முதலாவதாக வரும் மாட்டிற்கு எலுமிச்சம் பழமும் மஞ்சள் தூளும் கொடுப்பார்கள் அதுவே மாலைமேடு கிராமத்திற்கு பெருமைக்குரியதாகும் அதனைஅடுத்து தேவராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு மாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது.