சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. பெஞ்சல் புயலின் நகர்வு வேகம் குறைந்து மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்கிறது. புதுச்சேரிக்கு அருகே காரைக்கால்- மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பெஞ்சல் புயல் கரையை நெருங்க காலதாமதம் ஆகும் என்பதால் நாளை காலை தான் புயல் கரையை கடக்கும் என்று பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். மேலும் புயல் கரையை நெருங்க நெருங்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை அதிகரிககும் எனவும் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்..