வங்கக்கடலில் உருவான புயல் இன்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்து வருகிறது. மழை ஒருபுறம் இருக்க மறுபுறம், காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது. வௌியூர் செல்ல தயாராக இருந்த விமானங்கள் புறப்படவில்லை.
ஏற்கென இண்டிகோ விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சில வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்துக்கொண்டிருந்தன. இப்படி இருக்கையில் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.