மசோதாக்களை முடக்கி வைத்த கவர்னர் ரவின் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் கவர்னர் முடக்கி வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பினை அனைத்து மாநில கவர்னர்களுக்கும் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பினை பெற்றுத்தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அனைத்து மாநிலங்களின் தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள்.
வராலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்ப்பை பெற்றுத்தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரும் மே மாதம் 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்படுகிறது.