Skip to content
Home » திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

திருச்சி கூத்தைப்பாரில் பிப் 2ம் தேதி ஜல்லிக்கட்டு

  • by Authour

தை மாதம் பிறந்து விட்டால் தமிழகத்தில் ஆங்காங்கே  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.   தை மாதம் முதல் 3 நாட்கள் மதுரையில் ஜல்லிக்கட்டு விழா களைகட்டும்.  திருச்சி  மாவட்டத்திலும் தை மாதத்தில் இருந்து ஜல்லிக்கட்டு விழாக்கள் ஆங்காங்கே நடைபெறும். திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பாரில் பிப்ரவரி 2ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திருச்சி கலெக்டரிடம் அனுமதி கேட்டு  கிராம கமிட்டி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டரிடம்  கிராம கமிட்டி தலைவர்  ஆனந்த மூர்த்தி கொடுத்துள்ள மனுவில கூறியிருப்பதாவது: திருவெறும்பூர் அடுத்த  கூத்தைப்பார் கிராமத்தில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த வருகின்ற  தை மாதம் 20-ம் தேதி 02/02/2025 ஞாயிறு அன்று இந்த விழாவினை நடத்துவது என அனைத்து சமூகத்தினரும் முடிவு செய்துள்ளோம். இந்த விழாவினை உச்ச நீதிமன்ற விதிமுறைகளின் படியும், தமிழக அரசின் விதிமுறைகள் படியும் முறையான அனுமதியுடனும், ஒத்துழைப்புடனும் நடத்துவோம் என்று உறுதி அளிக்கின்றோம். ஆகவே தாங்கள் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு பணிவன்புடனும், தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.