கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடு இரவு பாலமநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் நடு இரவு குழி தோண்டி சடளத்தை மர்ம நபர்கள் புதைத்து சென்று விட்டனர் காலை நேரத்தில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது அச்சமடைந்துள்ளனர். மேலும் சுடுகாட்டில் கிராமத்தில் இறக்கும் நபர்களை சுடுகாட்டில் தற்போது புதைக்கப்படுவதில்லை பொள்ளாச்சி பகுதியில் உள்ள மின் மயானங்களில் தகனம் மற்றும் எறி ஊட்டப்படுகிற.து தற்போது ஜமீன் கோட்டாம்பட்டி தலைவர் பாலு என்கிற பாலசுப்ரமணியம் கொடுத்த தகவலின் பெயரில் ஆனைமலை காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர் ஸ்ரீமதி உத்தரவின் பேரு ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் மற்றும் கோட்டூர் காவல் நிலைய உதவியாளர் நாகராஜ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்,சடலத்தை புதைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.