பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் குழந்தைவேல் என்கின்ற தொழிலதிபரிடம் அவரது மகன் சக்திவேல் சொத்தை பிரித்து கேட்டு தகராறு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி கொடூரமாக தாக்கியினார் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த குழந்தைவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய நிலையில் கடந்த 18ஆம் தேதி படுக்கை அறையில் இருந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் இதன் இடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைகளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தந்தையும் மகனும் சமரசமான நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தாக்குதல்
சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் மீது ஏழு பிரிவுகளின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக எஃப் ஐ ஆர் போடாமல் காலம் தாமதம் செய்ததாக கைகளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிச்சாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு விட்டுள்ளதோடு அவர் ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்து பெரம்பலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்யாமிலா தேவி உத்தரவிட்டுள்ளார்.
தந்தையை தாக்கிய மகன் ஜாமின் கேட்டு மனு தாக்கல்…
பெரம்பலூர் அருகே சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தந்தை மீது தாக்குதலில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் சக்திவேல் ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் குழந்தைவேல் என்கின்ற தொழிலாளிடம் அவரது மகன் சக்திவேல் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி கொடூரமாக தாக்கினார் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பிய நிலையில் கடந்த 18ஆம் தேதி படுக்கை அறையில் இறந்த நிலையில் சடனமாக கண்டெடுக்கப்பட்டார் இதனிடையே இந்த தாக்குதலுக்கு சம்பளம் தொடர்பாக கைகளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தந்தை மகனும் சமரசமான நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில் தாக்க சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல் என்கின்ற சந்தோஷ் 7 பிரிவுகளில் கீழ் இரண்டு வழக்குகளில் கைகளத்தூர் போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சீதையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சக்திவேல் வழக்கறிஞர் மூலம் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த ஜாமீன் மனு மீது விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.