திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நாடார் காலணியில் இன்று காலை அப்பகுதியில் உள்ள மரத்திலிருந்து அணில் ஒன்று தனது குட்டியுடன் தவறி விழுந்த நிலையில் பரிதாபமாக தாய் அணில் உயிரிழந்த நிலையில் குட்டி அணில் பசியுடன் மரத்தின் அருகிலேயே கத்திக் கொண்டிருந்திருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நபர்கள் குட்டி அணிலுக்கு முதலுதவி அளித்து பாலூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி
வருகிறது. ஆறறிவு படைத்த மனிதன் பசியோடு இருப்பதே பார்த்து செல்லும் மக்கள் மத்தியில் வாயில்லா ஜீவனுக்கு பாலூட்டி முதலுதவி அளித்த பகுதியை சேர்ந்த நபர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்