காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்து, தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில் ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர்.
இதில் திருச்சி மேகநாதன், கரூர் தட்சிணாமூர்த்தி, சிறுகாம்பூர் பரமசிவம், தஞ்சை மகேந்திரன், ஜான் மெல்கியோ ராஜ், செய்தி தொடர்பாளர் பிரேம்குமார், பருத்தி கோட்டை சங்கர், தஞ்சை மாவட்ட செயலாளர் மதி, ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பானை மற்றும் செடிகளை தலையில் தூக்கிய படி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் நுழைய முற்பட்டனர். வாயில் கதவை மூடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து உதவி கலெக்டர் பிரவீணாகுமாரி, கோட்டாட்சியர் மகேஸ்வரி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். .