தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு சார்பாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதிக்கிராப்ட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவசூரியன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ், நிர்வாகிகள் ராஜேந்திரன், சொக்கை பழனிச்சாமி, மணப்பாறை ராதாகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் பழனிச்சாமி, ராஜ்குமார், ரமேஷ், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அனைத்து பாசன வாய்க்கால்களும் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும், ஆண்டு கணக்கில் சிதலமடைந்து கிடக்கும் பாசன குழுமிகள் மற்றும் பிரிவு வாய்க்கால்களின் கட்டமைப்பை சீர்படுத்த வேண்டும், காவிரிக் கொள்கை இடத்தில் கூடுதல் கதவனைகளை தடுப்பணைகளில் அமைக்க வேண்டும் மேலும் தமிழகத்தின் குடிநீர் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசையும், கர்நாடக அரசுக்கு துணை போகும் காவிரி ஒழுங்காற்று குழுவையும் இந்த போக்கினை கண்டு கொள்ளாத ஒன்றிய அரசை கண்டித்தும், வெயில் மற்றும் சூறை காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஒரு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.