Skip to content

விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது… விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசின் அனைத்து திட்டங்களின் பலன்களையும் பெற ஆதார் எண் போன்று தனித்துவமான மின்னணு முறையில் தேசிய அளவிலான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. எனவே தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில்
31 .3 .25 க்குள் கலந்துகொண்டு தங்களது நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்படும். எனவே விவசாயிகள் தவறாமல் முகாம்களில் கலந்து கொண்டு தனித்துவமான தேசிய அளவிலான அடையாள அட்டையை பெற்று பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!